T/R.K.M Sri Koneswara Hindu College
Old Students Association
United Kingdom


PROJECTS 2015
இரசாயணவியல் ஆய்வுகூட புனரமைப்பு.
பல தசாப்தங்களாக வருடா வருடம் பல மாணவர்களை பல்கலைக்களகங்களுக்கும் இன்னும் பல உயர் கற்கை நெறிகளுக்கும் அனுப்பி வைத்த ஒரு பாடசாலை எமது பாடசாலை என்பதில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விடயம். அவ்வாறு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு விடயம்தான் இந்த இரசாயணவியல் ஆய்வுகூடம்.
மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில், பாதுகாப்பற்ற முறையில் இந்த ஆய்வுகூடம் இருப்பது எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனை தொடர்ந்து எமது பழைய மாணவர் சங்க (பிரித்தானியா கிளை ) உதவியுடன் முழுமையாக புனரமைக்கப்பட்டிருக்கிறது. பிரித்தானியாவில் வாழ்கின்ற பழைய மாணவர்களின் அங்கத்துவ சந்தா மூலமும் மற்றும் நாம் நடாத்திய சில நிகழ்வுகளின் மூலமாக கிடைத்த இலாபம் மூலமுமாகத்தன் இந்த செயற்திட்டத்திற்கான பணம் எம்மால் ஒதுக்கப்பட்டது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
திருக்கோணமலையில் ஒரு முன்னணி பாடசாலையின் ஆய்வுகூடம் இவ்வளவு மோசமான நிலையில் இருக்குமென்றால் மற்றைய பாடசாலைகளை நினைத்து பார்க்கவா வேண்டும்? நாம் திருக்கோணமலையின் முதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள சில பாடசாலைகளுக்கும் எம்மாலான சில உதவிகளை செய்து வருகின்றோம்.
இன்று பிரித்தானியாவில் பல நூறு பழைய மாணவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட சில பழைய மாணவர்களே எமது பழைய மாணவர் சங்கத்தில் தங்களை உறுப்பினராக இணைத்துக்கொண்டு எம்முடன் தொடர்ந்து செயற்பட்டுக்கொடிருக்கிறார்கள். இங்கு வாழ்கின்ற பழைய மாணவர்கள் எம்முடன் தொடர்ந்து செயற்படுவார்களாக இருந்தால் எமது மண்ணில் பல செயற்திட்டங்களை சிறப்பாக செய்ய முடியும் என்பதனை மிகவும் நம்பிக்கையுடன் கூறிக்கொள்கின்றோம்.
அத்துடன் இன்றுவரை எமக்கு பல்வேறு வழிகளில் உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்ற எமது அன்புள்ளங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
